Home Featured நாடு உதவித் தலைவருக்குப் போட்டியா? டி.மோகன் நாளை அறிவிப்பு!

உதவித் தலைவருக்குப் போட்டியா? டி.மோகன் நாளை அறிவிப்பு!

707
0
SHARE
Ad

Dato T.Mohan former Youth leaderகோலாலம்பூர் – எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா தேசியப் பொதுப் பேரவையில் தேசிய நிலையிலான பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இதற்கான போட்டிகள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, மூன்று தேசிய உதவித் தலைவர்களுக்கான போட்டி வழக்கம்போல் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக நேற்று டத்தோஸ்ரீ சா.வேள்பாரி அறிவித்துள்ள நிலையில், நாளை வெள்ளிக்கிழமை அக்டோபர் 9ஆம் தேதி டத்தோ டி. மோகனும் தேசிய உதவித் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

நாளை மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் காலை  11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் எந்தப் பதவிக்குப் போட்டியிடுவேன் என்பதை அறிவிக்கவிருப்பதாக டி.மோகன் பத்திரிக்கைகளுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.மோகன் தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில் தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட, கட்சியின் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவரான மோகன் தோல்வியைத் தழுவினார்.

இருப்பினும், பின்னர் அந்தத் தேர்தல்களில் முறைகேடுகளில் நடைபெற்றதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தப் புகார்களை சங்கப் பதிவகத்திற்குக் கொண்டு சென்று போராட்டம் நடத்தியதில் மோகன் முன்னணி வகித்தார்.

சங்கப் பதிவகமும் அந்தத் தேர்தல்கள் செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து இப்போது அதற்கான மறுதேர்தல்கள் எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறுகின்றன.