Home இந்தியா ஒருவழியாக விஜய் மல்லையாவை சுற்றி வளைத்தது சிபிஐ!

ஒருவழியாக விஜய் மல்லையாவை சுற்றி வளைத்தது சிபிஐ!

606
0
SHARE
Ad

vijay-mallayaபெங்களூர் – பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் இருந்து, நடிகர் விஜய் வரை மல்லையாவை தூற்றாத ஆட்களே இல்லை. கிங்பிஷர் நிறுவனத்திற்காக விதிகளை மீறி, அளவிற்கு அதிகமாக கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி செலுத்தாமல், இதுவரை போக்குகாட்டி வந்தவரை நேற்று தான் சிபிஐ சுற்றி வளைத்து மடக்கி உள்ளது.

வங்கி மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ, அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று அதிரடி சோதனைகளை நடத்தியது. பெங்களூர், மும்பை, கோவா ஆகிய நகரங்களில் உள்ள மல்லையாவின் வீடுகளிலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், தெரிந்தே அளவிற்கு அதிகமாக கடன் கொடுத்த அதிகாரிகளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.