Home இந்தியா மீத்தேன் வாயு திட்டத்திற்கு அனுமதி இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

மீத்தேன் வாயு திட்டத்திற்கு அனுமதி இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

688
0
SHARE
Ad

methane-projectசென்னை – காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மீத்தேன் வாயு திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்ததில் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

methane-project1தமிழக அரசின் உறுதியான இந்த முடிவால் டெல்டா விவசாயிகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.