காரணம், கட்சியில் அடுத்த கட்டத் தலைவர்களாகப் பார்க்கப்படும் முக்கியத் தலைவர்கள் அனைவரும் உதவித் தலைவர் பதவியைக் குறிவைத்து களமிறங்குகின்றனர்.
டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ டி.மோகன், டத்தோஸ்ரீ வேள்பாரி ஆகியோர் இதுவரை உதவித் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில், தலைநகர் மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் கல்வி துணை அமைச்சரும் நடப்பு மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான பி.கமலநாதன் தேசிய உதவித் தலைவருக்காக தான் போட்டியிடவிருப்பதை அறிவிக்கவுள்ளார்.
இருப்பினும், தேசிய உதவித் தலைவர் தேர்தலில் கமலநாதன் குதிப்பது உறுதி என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, மஇகா உதவித் தலைவர் தேர்தலில் ஏறத்தாழ 10 பேர் போட்டியிடக் கூடும் எனத் தெரிகின்றது. இதனால் போட்டி முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை நிர்ணயிக்க முடியாத வண்ணம், மிகவும் நெருக்கடியான ஒன்றாக உதவித் தலைவர்கள் போட்டிகள் இந்த முறை இருக்கும்.
டத்தோ வி.எஸ்.மோகன், நடப்பு தலைமைச் செயலாளர் சக்திவேல் அழகப்பன், டத்தோ ஜஸ்பால் சிங், சுந்தர் டான்ஸ்ரீ சுப்ரமணியம் ஆகியோரும் அடுத்து வரும் சில நாட்களில் தாங்களும் போட்டியிடவிருப்பது குறித்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.