Home Featured நாடு ஆதாரங்களைக் காட்டுங்கள் அல்லது வாயை மூடுங்கள் – டோனி புவாவுக்கு 1எம்டிபி அறிவுறுத்து!

ஆதாரங்களைக் காட்டுங்கள் அல்லது வாயை மூடுங்கள் – டோனி புவாவுக்கு 1எம்டிபி அறிவுறுத்து!

557
0
SHARE
Ad

tony-pua1-250613கோலாலம்பூர்- 1எம்டிபி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் டோனி புவா, தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட வேண்டுமென 1எம்டிபி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

1எம்டிபி மிகக் கடுமையான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை டோனி புவா சுமத்தி வருவதாகவும், தன்னிடம் வலுவான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அவர் வெளியிட வேண்டும் என்றும் 1எம்டிபி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“தன்னிடம் உள்ள அந்த ஆதாரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளித்து, அது தொடர்பான விசாரணை நடைபெற டோனி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அவர் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை சுமத்தும் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

ஏனெனில் அக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்பட்டவை” என 1எம்டிபி அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுக் கணக்குக் குழுவின் உறுப்பினராகவும் உள்ள டோனி புவா எம்.பி., உண்மைத்தன்மையற்ற அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாகச் சாடியுள்ள 1எம்டிபி, தவறு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது எனில், சட்டத்திற்குட்பட்டு அது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே டோனி புவா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 1எம்டிபி முறைகேடு தொடர்பான ஆவணங்கள் வெளியே கசிந்தது குறித்து மட்டுமே அதன் தலைவர் அருள் கந்தா கவலைப்படுவதாகவும், நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக அவர் கருத்து தெரிவிப்பதில்லை என்றும் விமர்சித்துள்ளார்.