Home 13வது பொதுத் தேர்தல் தேசிய முன்னணி 160 நாடாளுமன்ற இடங்களை வெல்லும்: அஹ்மட் மஸ்லான் தகவல்

தேசிய முன்னணி 160 நாடாளுமன்ற இடங்களை வெல்லும்: அஹ்மட் மஸ்லான் தகவல்

526
0
SHARE
Ad

Ahmad-Maslan-UMNO-Sliderகோலாலம்பூர், மார்ச் 14-  எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை தேசிய முன்னணி பெறும் என்ற  நம்பிக்கை கொண்டிருப்பதாக   பிரதமர்துறை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் (படம்) கூறியுள்ளார்.

2008 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளிடம்  கட்சிகளிடம் இழந்த மாநிலங்களைத் திரும்பக் கைப்பற்றும் ஆற்றலும் அதற்குண்டு என்றார்.

2008-இல் எதிர்க்கட்சிக்கு  சாதகமாக இருந்ததைப் போன்ற அரசியல் சூழல் தற்போது இல்லை என அம்னோ தகவல் தலைவருமான அஹ்மட் கூறினார்.

#TamilSchoolmychoice

“கைவசமுள்ள 140 இடங்களைத் தக்க வைத்துக்கொள்வதுடன் பாஸ் வசமுள்ள 20 இடங்களில் இருந்து 5 இடங்களையும்  பிகேஆரின் வசமுள்ள 31 இடங்களில் இருந்து 10 இடத்தையும்,  டிஏபியிடமிருந்து 5  இடங்களையும் பிஎன் கைப்பற்றும்.

“140 இடங்களுடன் இந்த இருபதையும் சேர்த்து 160 இடங்கள் எங்கள் வசமிருக்கும்.  இது, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைவிட அதிகமாகும்” என ஜோகூர் பாருவில் டேவான் டான்ஸ்ரீ முகம்மட் ரஹ்மாட்டில் அவர் ஜோகூர் பிஎன் தகவல் இயந்திரத்தைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

எதிர்க்கட்சி வசமுள்ள மாநிலங்களில் கெடாவைக் கைப்பற்ற பிஎன் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.  அதை அடுத்து சிலாங்கூர், கிளந்தான், பினாங்கு ஆகியவையும் விழலாம் என்றார் அவர்.

2008-இல் இருந்ததைவிட சீனர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு கூடியிருக்கிறது. சீனர் சமூகம் பொருளாதாரத்திலும், தொழில் வாய்ப்புகளிலும் அரசியல் நிலைத்தன்மையிலும் அக்கறை கொண்ட ஒரு சமூகம்.

தேசிய  முன்னணி அரசாங்கம் பொருளாதாரத்தை நல்ல முறையில் நிர்வகித்து வந்துள்ளதையும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதையும் அரசியல் நிலைத்தன்மை குலைந்துவிடாமல் பாதுகாத்து வந்துள்ளதையும் சீனர்கள் உணர்கிறார்கள்.

“எனவே, அவர்களின் கண்ணோட்டம் எதிர்வரும் தேர்தலில் வேறு மாதிரியாக இருப்பது உறுதி”, என்றவர் கூறினார்.