Home Featured நாடு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மாத வருமானத்தில் பிடித்தம் – மலேசிய அரசு புதிய திட்டம்!

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மாத வருமானத்தில் பிடித்தம் – மலேசிய அரசு புதிய திட்டம்!

755
0
SHARE
Ad

MDG--Foreign-workers-in-M-007கோலாலம்பூர் – சந்தையில் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சியில் உள்ளதைத் தொடர்ந்து, அதனை சற்று நிலைப்படுத்த, மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மாத வருமானத்தில் சில மாற்றங்களை அரசாங்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அந்தத் திட்டத்தின் படி, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்களின் மாத வருமானத்தில் ஒரு பகுதியை அரசாங்கத்தின் நிதிக்காக அளிக்க வேண்டும் என்று தகவல்கள் வந்திருப்பதாக பிரபல சீன மொழி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஊழியர்களின் லாபவைப்பு நிதி (Employees’ Provident Fund) போன்று வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மாத வருமானத்தில் அந்தத் தொகை பிடித்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

“மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மிக அதிகமான ஊதியங்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள் என்பதை அரசாங்கம் அறியும். இதனால் ஏற்பட்டிருக்கும் ரிங்கிட் மதிப்பு சரிவு, மலேசியாவின் பொருளாதாரத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.”

“வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்களது வருமானத்தில் எவ்வளவு செலுத்த வேண்டும். அதை எப்போது திரும்பப் பெற முடியும் என்பதை அரசாங்கம் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது.” என்று சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் கிடைத்திருப்பதாக அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.