Home Featured தொழில் நுட்பம் அரசு உங்களை வேவு பார்த்தால் பேஸ்புக் எச்சரிக்கும்!

அரசு உங்களை வேவு பார்த்தால் பேஸ்புக் எச்சரிக்கும்!

660
0
SHARE
Ad

facebookகோலாலம்பூர் – இன்றைய நடைமுறையில் பெரும்பாலான குற்றங்களுக்கு இணையம் தான் வழிவகை செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயத்தில், தவறுகளை காட்டிக் கொடுப்பதும் அதே இணையம் தான். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்கள் மூலம் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், தீவிரவாதம், ஆபாசம் என பெரும் பிரச்சனைகளும் அசுர வளர்ச்சி பெற்று வருகின்றன.

இதனை ஒடுக்க அரசு பல்வேறு சமயங்களில், பலரின் இணைய செயல்பாடுகளை கண்காணிக்கும். அப்படி அரசு கண்காணிப்பதை அம்பலப்படுத்தும் முயற்சியில் பேஸ்புக் இறங்கி உள்ளது. அதாவது, பேஸ்புக் பயனர் ஒருவரின் கணக்கினை அரசு உளவு பார்க்கிறது என்றால், அந்த பயனருக்கு எச்சரிக்கை குறுந்தகவலை அனுப்ப பேஸ்புக் முடிவு செய்துள்ளது.

facebook1எச்சரிக்கை குறுந்தகவல்

#TamilSchoolmychoice

அரசு கண்காணிப்பில் இருக்கும் ஒருவரை, பேஸ்புக்கே எச்சரிக்கை செய்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதா? என்ற விவாதத்தை விட, ஒருவரின் கணக்கினை கண்காணிப்பது அரசா? அல்லது தனிநபர் தாக்குதலா? என்பதை பேஸ்புக் நிறுவனம் எப்படி கண்டறியும் என்பது பற்றிய சரியான விளக்கங்கள் இல்லை.