Home Featured வணிகம் ஏர் ஆசியாவின் 3 மில்லியன் இருக்கைகள்: ஆசிய நாடுகளுக்கு சிறப்பு சலுகைகள்!  

ஏர் ஆசியாவின் 3 மில்லியன் இருக்கைகள்: ஆசிய நாடுகளுக்கு சிறப்பு சலுகைகள்!  

648
0
SHARE
Ad

air-asia-airplane-M-300x224கோலாலம்பூர் – ஏர் ஆசியா நிறுவனம் ஆசியாவின் 20 நாடுகளுக்கான விமான சேவைகளுக்கு பல்வேறு சிறப்பான சலுகைகளை அறிவித்துள்ளது.

மலிவு விலை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் ஆசியா, சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் முக்கிய போக்குவரத்து முனையங்களுக்கு 3 மில்லியன் இருக்கைகள் இருப்பதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் பயணர்கள், கோலாலம்பூரில் இருந்து பட்டாயாவிற்கும் (தாய்லாந்து), கோவாவிற்கும் (இந்தியா) ஒரு வழிக் கட்டணமாக முறையே 99 மற்றும் 229 ரிங்கிட்டில் பயணம் மேற்கொள்ளலாம். அதேபோல், கோலாலம்பூரில் இருந்து பூசான் (தென் கொரியா) மற்றும் சப்போரோவிற்கு (ஜப்பான்) முறையே 249 மற்றும் 359 ரிங்கிட் ஒரு வழிக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கான கட்டண முன்பதிவு இம்மாதம் 19-ம் தேதி (நேற்று) தொடங்கி 25-ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவைப் பயன்படுத்தி 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 29-ம் தேதி வரை பயணம் செய்யலாம்.

உள்நாட்டு விமான போக்குவரத்திலும் சிறப்பு சலுகைகள்

ஏர் ஆசியா, உள்நாட்டு விமான சேவையிலும் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. கோலாலம்பூரில் இருந்து பினாங்கு மற்றும் கோத்தா பாருக்கு ரிங்கிட் 29-ம், லங்காவிக்கு ரிங்கிட் 39-ம், கூச்சிங்கிற்கு ரிங்கிட் 89-ம் ஒரு வழி பயணக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.