Home Featured வணிகம் ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்படுமா? – அப்துல் வாகிட் ஓமார் பதில்!

ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்படுமா? – அப்துல் வாகிட் ஓமார் பதில்!

523
0
SHARE
Ad

gst-in-malaysiaகோலாலம்பூர் – நாட்டில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சுமார் 80 சதவீதம் பேர் ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல், சுமார் 68 சதவீதம் பேர், பொறுப்பற்ற வியாபாரிகள் மூலம் கணக்கற்று உயர்ந்துள்ள விலைவாசி ஏற்றத்தை அரசு அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டு வருவர் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 2016 பட்ஜெட்டில் ஜிஎஸ்டியில் மாற்றம் வருமா? என்பது குறித்து, பிரதமர் துறை அமைச்சரான டத்தோஸ்ரீ அப்துல் வாகிட் ஓமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியிருப்பதாவது:-

“2016 பட்ஜெட்டில், ஜிஎஸ்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போது ஜிஎஸ்டி விகிதம் 6 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.