Home Featured நாடு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: வான் அசிசா தாக்கல் செய்கிறார்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: வான் அசிசா தாக்கல் செய்கிறார்

516
0
SHARE
Ad

wan azizaகோலாலம்பூர்- பிரதமருக்கு எதிராகத் தாம் அளித்திருந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தைத் திரும்பப் பெறப் போவதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியான் தெரிவித்துள்ளார்.

எனினும் இத்தீர்மானத்தை பிகேஆர் தலைவர் வான் அசிசாவே நேரடியாகத் தாக்கல் செய்வார் என்றும், அவருக்கு வழிவிடும் வகையிலேயே தாம் கொண்டு வந்த தீர்மானத்தை திரும்பப் பெறுவதாகவும் ஹீ லோய் கூறியுள்ளார்.

“எனது தீர்மானத்தை திரும்பப் பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், அவருக்கு (வான் அசீசா) வாய்ப்பு தருகிறோம். வான் அசிசா எப்போது புதிய தீர்மானத்தை தாக்கல் செய்கிறார் என்பதைப் பொறுத்தே எனது தீர்மானத்தை திரும்பப் பெறுவேன்” என்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஹீ லோய் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான வான் அசிசா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தாமே கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.