Home Featured உலகம் தந்தையின் கைத்துப்பாக்கியால் 3 வயது தம்பியை சுட்டுக் கொன்ற 6 வயது அண்ணன்!

தந்தையின் கைத்துப்பாக்கியால் 3 வயது தம்பியை சுட்டுக் கொன்ற 6 வயது அண்ணன்!

546
0
SHARE
Ad

child1சிகாகோ – அமெரிக்காவின் ஆயுதக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மற்றொரு கோரச்சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. தந்தை கவனக்குறைவாக மறந்து விட்டுச் சென்ற கைத்துப்பாக்கியை எடுத்து 6 வயது சிறுவன், தனது 3 வயது தம்பியை சுட்டுக் கொன்றுள்ளான்.

அமெரிக்காவில் சிகாகோ பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் சேண்டியாகோ. இவருக்கு 3 வயதிலும், 6 வயதிலும் இரு மகன்கள் இருந்தனர். சமீபத்தில், சிறுவர்கள் இருவரும் திருடன்-போலீஸ் விளையாட்டு விளையாடி உள்ளனர். மைக்கேலின் மூத்த மகன், தனது தம்பியை பிடிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது தான், குளிர்சாதனப் பெட்டியின் மீது மைக்கேல் சேண்டியாகோவின் கைத்துப்பாக்கி, அவன் கண்களில் பட்டுள்ளது. துப்பாக்கியை கையில் எடுத்த அடுத்த சில நொடிகளில், மறைந்திருந்த தனது தம்பியை நோக்கி சுட்டுள்ளான்.

chicagoஇதில் அந்த சிறுவன் முகத்தில் குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளான். சத்தம் கேட்டு விரைந்து வந்த குழந்தைகளின் தாத்தா, விழுந்து கிடைந்த தனது பேரனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். எனினும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், கவனக்குறைவாக துப்பாக்கி வைத்திருந்ததாக மைக்கேல் சேண்டியாகோவை கைது செய்துள்ளனர். விளையாட்டு விபரீதமாக மாறிய இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.