அதற்கான வேட்புமனுவை இன்று இருவரும் மஇகா தலைமையகத்தில் தாக்கல் செய்தனர்.
அதேவேளையில், 3 தேசிய உதவித்தலைவர் பதவிகளுக்கு, முன்னாள் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ எஸ்.விக்னேஸ்வரன், முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டி.மோகன், நெகிரி செம்பிலான் செயற்குழு உறுப்பினர் டத்தோ வி.எஸ்.மோகன் மற்றும் மஇகா தேசியப் பொருளாளர் டத்தோ ஜஸ்பால் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
எனினும், தேசிய உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிட கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் டான்ஸ்ரீ எஸ்.சுப்ரமணியத்தின் மகனான சுந்தர் சுப்ரமணியம் தாக்கல் செய்த வேட்புமனு, நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், 23 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 44 பேர் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களில், வேள்பாரி சாமிவேலு, எஸ்.பி.மணிவாசகம், ஏ.ஆனந்தன், பி.கமலநாதன், டத்தோ எஸ்.பரஞ்சோதி மற்றும் எஸ்.அசோகன் ஆகிய கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அடங்குவர்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த பின்னர், மஇகா தேசியத் தலைவரும், தேர்தல் குழுத் தலைவருமான டத்தோ எஸ்.சுப்ரமணியம் வேட்பாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.