Home Featured தொழில் நுட்பம் மலேசியாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் – நாள் ஒன்றுக்கு 30 பேர் பாதிப்பு!

மலேசியாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் – நாள் ஒன்றுக்கு 30 பேர் பாதிப்பு!

485
0
SHARE
Ad

cyberகோலாலம்பூர் – மலேசியாவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனால் நாள் ஒன்றுக்கு 30 மலேசியர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் சைபர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், சாதாரண தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றுக்காரர்கள் மக்களை எளிதாக ஏமாற்றிவிடுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மலேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் டாக்டர் அம்ருதீன் அப்துல் வஹாப் கூறுகையில், “ஹேக்கர்கள் மிகச் சாதாரணமான வழிமுறைகளை பயன்படுத்தி நட்பு ஊடகங்களிலும், பொது வைஃபைகளிலும் வைரஸ் நிரல்களை பதிவேற்றம் செய்து மக்களின் கடவுச் சொற்களை எளிதாக திருடுகின்றனர். சைபர் பாதுகாப்பில் பலவீனமான இணைப்பு என்றால் அது மக்கள் தான். ”

“மக்கள் மத்தியில் இணையத்தை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கான தெளிவு மிகக் குறைவாகவே இருக்கிறது. அதனால் இந்த விவகாரத்தில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்றால்,  சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “மிகச் சாதாரணமாக, நாள் ஒன்றுக்கு 30 மலேசியர்கள் சைபர் குற்றங்களால் ஏமாறுகின்றனர், பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. பலருக்கு தாங்கள் ஏமாறுகிறோம் என்பதே தெரியவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

சைபர் பாதுகாப்பு அமைப்பு இது பற்றிய விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.