Home Featured நாடு சுப்ரா ஆதரவு பெற்ற அந்த 29 வேட்பாளர்கள் யார்? வெற்றி வாய்ப்பு எப்படி?

சுப்ரா ஆதரவு பெற்ற அந்த 29 வேட்பாளர்கள் யார்? வெற்றி வாய்ப்பு எப்படி?

985
0
SHARE
Ad

MIC Logo and Flagகோலாலம்பூர் – எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா தேர்தல்களில், ஒவ்வொரு மாநிலமாகச் சென்று மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அடையாளம் காட்டி பிரச்சாரம் செய்து வரும் 29 மத்திய செயலவை வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்?

வெல்லப் போவது யார்?

பேராளர்கள் 23 பேரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், தேசியத் தலைவரின் அணியில் இடம் பெற்றுள்ள 29 வேட்பாளர்களில் வென்று வரக் கூடியவர்கள் யார் என்ற பரபரப்பு பிரச்சாரங்களில் நிலவி வருகின்றது.

#TamilSchoolmychoice

மேற்கண்ட 29 வேட்பாளர்களில், அவர்களின் அறிமுகம் – பிரச்சார பலம் – கல்வித் தகுதிகள் – அண்மையில் நடைபெற்ற கட்சிப் போராட்டத்தில் அவர்களின் ஈடுபாடு – ஆகியவற்றின் அடிப்படையில் 23 பேரை பேராளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Subra-Optometrics Conference-இவர்களைத் தவிர தேசியத் தலைவரின் அணிக்கு வெளியே மேலும் 15 வேட்பாளர்கள் மத்திய செயலவைக்கான போட்டியில் குதித்துள்ளனர். அவர்களில் சிலரும் பேராளர்களிடையே நன்கு அறிமுகமானவர்கள், ஏற்கனவே மத்திய செயலவையில் இருந்தவர்கள் என்பதோடு, அவர்களின் சிலரும் மிகத் தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.

எனவே, இந்த 29 பேரைத் தவிர்த்து மேலும் ஓரிருவர் தேசியத் தலைவரின் அணிக்கு வெளியிலிருந்து வென்று வரக் கூடிய வாய்ப்புகளும் நிலவுவதாக மஇகா பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அதே வேளையில், தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவும், இவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் எனப் பேராளர்களைக் கட்டாயப்படுத்துவதில்லை.

மாநிலம் வாரியாக சரியான முறையிலான பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காக மட்டுமே 29 பேரை நான் தேர்ந்தெடுத்துள்ளேன், யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை பேராளர்களிடையே விட்டு விடுகின்றேன் என ஜனநாயக முறைப்படி டாக்டர் சுப்ரா கூறி வருவதாலும், அவரது அணிக்கு வெளியிலிருந்து ஓரிருவர் வென்று வரக் கூடிய வாய்ப்புகள் இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

MIC-logoஇன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால், 23 வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டிய பேராளர்களுக்கு 29 வேட்பாளர்களை தேசியத் தலைவர் முன்னிறுத்தியிருப்பதால், அவர்களில் இருந்துதான் 23 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அதன் மூலம் கட்சியில் தேசியத் தலைவரின் ஆதிக்கமும், ஆதரவு பலமும் மேலும் கூடும் எனவும் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

வென்று வரும் 23 பேரைத் தவிர, மேலும் 9 பேரை மத்திய செயலவை உறுப்பினர்களாக நியமிக்கும் அதிகாரமும் தேசியத் தலைவருக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசியத் தலைவரின் ஆசி பெற்று – அவரது அதிகாரத்துவ அணியில் இடம் பெற்றுள்ள – அந்த 29 வேட்பாளர்கள் யார் என்பதை அவர்களின் தேர்தல் வாக்குச் சீட்டு எண் வரிசை வாரியாக – மாநிலம் வாரியாகப் பார்ப்போமா?

தேசியத் தலைவரின் அணியில் இடம் பெற்றுள்ள 29 வேட்பாளர்கள்

கெடா ( 2பேர்)

# 1 – எஸ்.ஆனந்தன் (கெடா) –

#  11 – டி.எச்.சுப்ரா

பினாங்கு (3 பேர்)

# 5 – டத்தோ எம்.ஞானசேகரன்

# 43 – ஜே.தினகரன்

# 14 – கே.லோகநாதன்

பேராக் (4 பேர்)

# 10 – டத்தோ வி.இளங்கோ

# 32 – ஆர்.சுப்ரமணியம் (பாகான் டத்தோ)

# 9 – கே.தங்கராஜ்

# 7 – எம்.ராஜா

சிலாங்கூர் (9 பேர்)

# 33 – மாண்புமிகு பி.கமலநாதன்

# 42 -சக்திவேல்

# 35 – கே.ஆர்.பார்த்திபன்

# 31 – டத்தோ என்.முனியாண்டி

# 23 – எஸ்.பி.மணிவாசகம்

# 34 – என்.இரவிச்சந்திரன் (காஜாங்)

# 19 – மது மாரிமுத்து

# 16 – டத்தோ எஸ்.எம்.முத்து

# 38 – டத்தோ ஆர்.எஸ்.மணியம் (கோத்தா ராஜா)

நெகிரி செம்பிலான் (2 பேர்)

# 3 – மாண்புமிகு டத்தோ மாணிக்கம் லெட்சுமண்

# 20 – டத்தோ எஸ்.ராஜேந்திரன்

மலாக்கா

# 39 – டத்தோ ஜி.கண்ணன்

ஜோகூர் (4 பேர்)

# 30 – மாண்புமிகு டத்தோ எம்.அசோஜன்

# 2 – எஸ்.கண்ணன் – கேலாங் பாத்தா

# 22 – மாண்புமிகு ரவின் குமார் கிருஷ்ணசாமி

# 29 – ஜி.இராமன் குளுவாங்

பகாங் (ஒருவர்)

# 17 – டத்தோ ஆர்.குணசேகரன்

கூட்டரசுப் பிரதேசம்

# 13 – டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி

# 36 -ஆர்.நடராஜன்

# 44 – டத்தோ டல்ஜிட் சிங்