Home Featured நாடு சிலாங்கூர் ஜசெக குழுவில் அசிஸ் பாரி நியமிக்கப்பட்டார்!

சிலாங்கூர் ஜசெக குழுவில் அசிஸ் பாரி நியமிக்கப்பட்டார்!

726
0
SHARE
Ad

Aziz-Bariகோலாலம்பூர்- அரசியல் சாசன சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி உட்பட ஐந்து பேர் சிலாங்கூர் மாநில ஜசெக குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் எட்ரி ஃபைசல் எடி யூசோஃப், யங் சைஃபுரா ஓத்மான் ஆகிய இருவரும் மலாய்க்காரர்கள் ஆவர்.

இருவரில் சிலாங்கூர் ஜசெக செயற்குழுவில் எட்ரி ஏற்கெனவே இடம்பெற்றிருந்தார். எனினும் இன்று நடைபெற்ற ஜசெக தேர்தல் அவருக்கு சாதகமாக இல்லை. யங் சைஃபுரா தேர்தலில் போட்டியிடவில்லை.

#TamilSchoolmychoice

புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ், டாமன்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் இயோ பீ யின் ஆகியோர் ஜசெக மாநில குழுவில் நியமிக்கப்பட்டுள்ள மற்ற இரு உறுப்பினர்கள் ஆவர்.

பெட்டாலிங் ஜெயா உத்தாரா அம்னோ எம்.பி., டோனி புவா 495 வாக்குகள் பெற்று சிலாங்கூர் ஜசெகவை தொடர்ந்து வழிநடத்துவதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.