Home Featured வணிகம் இளைஞர்களைக் கவர லியோனல் மெஸ்சியை தூதுவராக்கிய டாடா மோட்டார்ஸ்!

இளைஞர்களைக் கவர லியோனல் மெஸ்சியை தூதுவராக்கிய டாடா மோட்டார்ஸ்!

743
0
SHARE
Ad

messi1புது டெல்லி – இந்தியாவின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், உலக அளவில் தனது விற்பனையை பெருக்கவும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தங்கள் தயாரிப்பினை எடுத்துச் செல்லவும், கால்பந்து உலகின் உச்ச நட்சத்திரமான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சியை தங்களது உலகளாவிய விளம்பரத் தூதுவராக்கி உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்தில் இரண்டு தயாரிப்புகளை வெளியிட முடிவு செய்திருக்கும் டாடா நிறுவனம், தங்களது தயாரிப்புகளை உலகளாவிய சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல நன்கு பரிச்சயமான முகத்தை தேடி வந்தது. அதன்படி, மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் உலக அளவில் கால்பந்து விளையாட்டு மூலம் பெரிய அளவில் மக்களிடையே பிரபலமாகி உள்ள மெஸ்சியை டாடா நிறுவனம் தூதுவராக்கி உள்ளது.

மெஸ்சியுடனான டாடாவின் இந்த ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகள் தொடரும் என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

மெஸ்சியின் தேர்வு குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டாடா மோட்டார்ஸ் குறித்தும், எங்களது தயாரிப்புகள் குறித்தும் உலக அளவில் எடுத்துரைக்க மெஸ்சியே சிறந்த தேர்வாக இருப்பார். இந்திய அளவிலும், உலக அளவிலும் மெஸ்சிக்கு இருக்கும் ரசிகர்களை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.