Home Featured கலையுலகம் கேரி தீவில் கபாலி கொண்டாட்டம்!

கேரி தீவில் கபாலி கொண்டாட்டம்!

668
0
SHARE
Ad

Kabaliபந்திங் – கபாலி படப்பிடிப்பு தற்போது கேரித் தீவில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று தீபாவளியை முன்னிட்டு கபாலி படக்குழுவினர் சிறிய அளவிலான கொண்டாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இது குறித்து மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரேஷன் நிர்வாக இயக்குநர் அப்துல் மாலிக் தாஸ்திகீர் கூறுகையில், காலை 8.30 மணியளவில் சுமார் 35 பேர் இக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

“படப்பிடிப்பு எந்த ஒரு தடையும் இன்றி சிறப்பாக நடைபெற ரஜினி பிரார்த்தனை செய்தார்”

#TamilSchoolmychoice

“அதேவேளையில், தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்” என்று அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார்.

கேரி தீவில் கடந்த நவம்பர் 6-ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள கபாலி குழுவினர், நாளையுடன் அங்கு படப்பிடிப்பை நிறைவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்பு மீண்டும் கோலாலம்பூரில் நவம்பர் 21-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்தவுள்ள அவர்கள், அதன் பின்பு பேங்காக், தாய்லாந்து ஆகிய இடங்களில் படப்பிடிப்பைத் தொடர்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.