Home Featured இந்தியா எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் மருந்து – கொல்கத்தாவில் அறிமுகம்!

எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் மருந்து – கொல்கத்தாவில் அறிமுகம்!

626
0
SHARE
Ad

HIVகொல்கத்தா – சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளிகள் உள்ள கொல்கத்தாவின் சோனாகச்சி பகுதியில், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் தடுக்க புதிய மருந்து ஒன்று வரும் டிசம்பர் மாதம் அந்நகரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதற்கான அறிவிப்பை சோனாகச்சி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிபர் சமர்ஜித் ஜனா தெரிவித்துள்ளார்.

இந்த மருந்திற்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளன.

#TamilSchoolmychoice

சோனாகச்சி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிபர் சமர்ஜித் ஜனா கூறுகையில், இந்த மருந்துகளை வைத்து எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களிடமும், பாதிப்பில்லாதவர்களிடமும் நேரடியாக ஆய்வு நடத்தி விட்டதாகவும், இவை வரும் டிசம்பர் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.