Home Featured நாடு இந்திய சமுதாய வாக்குகளைக் குறிவைத்து பிரதமர் நஜிப்பின் தீபாவளி வருகைகள்!

இந்திய சமுதாய வாக்குகளைக் குறிவைத்து பிரதமர் நஜிப்பின் தீபாவளி வருகைகள்!

650
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வழக்கமாக அரசியல் கட்சிகளின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகளுக்கு மட்டும் வருகை தரும் பிரதமர் நஜிப் துன் ரசாக், நேற்றைய தீபாவளித் திருநாளை முன்னிட்டு வரிசையாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இது இந்திய சமுதாய வாக்குகளை குறி வைத்து, ஆதரவு தேடும் நோக்கம் கொண்டது என்றும்,

அதே வேளையில் 1எம்டிபி பிரச்சனையில் சரிந்து வரும் மக்கள் செல்வாக்கை தூக்கி நிறுத்தும் வகையிலும் – குறிப்பாக இந்திய சமுதாயத்தில் நஜிப்பின் தலைமைத்துவம் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்ததாகவும் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

MIC -Deepavali open house-Najib-பத்துமலையில் மஇகா தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமருடன் கல்வி துணையமைச்சர் பி.கமலநாதன், மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம், புதிய துணைத் தலைவராகத் தேர்வு பெற்ற எஸ்.கே.தேவமணி

காலையில் பத்துமலை வளாகத்தில் நடந்த மஇகாவின் திறந்த இல்ல உபசரிப்பில் தனது துணைவியார் ரோஸ்மா மன்சோருடன் கலந்து கொண்ட பிரதமர் நஜிப், அதன் பின்னர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா வட்டாரத்தில் பிபிபி கட்சியினர் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையில் நடத்திய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பிலும் கலந்து கொண்டார்.

PPP-Deepavali open house-Najib

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதியில் நடைபெற்ற பிபிபி கட்சியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் தம்பதியருடன் பிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ்.

பிரதமரின் தீபாவளி வருகைகளில், வித்தியாசமாகவும், தகவல் ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்ததாகவும் அமைந்தது, ஒரு சமூக சேவகியான இலட்சுமியின் இல்லத்திற்கு பிரதமர் மேற்கொண்ட வருகை.

Najib-Deepavali-Letchumi house

சமூக சேவகி இலட்சுமியின் இல்லத்தில் பிரதமர்…

இந்திய அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, சாதாரண இந்தியக் குடும்பங்கள் மீதும் எனது கவனம் பதிந்துள்ளது என்பதை நஜிப் சொல்லாமல் சொல்லி புரிய வைத்ததாக இந்த சம்பவம் பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம் சாதாரண அடித்தட்டு இந்திய சமுதாயத்தின் ஆதரவை ஈர்க்கும் நோக்கிலும் பிரதமர் செயல்பட்டுள்ளார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றார்கள்.

-செல்லியல் தொகுப்பு