Home Featured உலகம் எம்எச்370-ன் தாக்கம் – விமானங்களைக் கண்காணிப்பதில் உலக நாடுகள் முக்கிய முடிவு!

எம்எச்370-ன் தாக்கம் – விமானங்களைக் கண்காணிப்பதில் உலக நாடுகள் முக்கிய முடிவு!

629
0
SHARE
Ad

satelliteஜெனிவா – விமானங்களை கண்காணிப்பதில் தற்போது இருந்து வரும் நடைமுறையை முற்றிலும் மாற்றி, செயற்கைக் கோள் மூலம் விமானங்களைக் கண்காணிப்பது தொடர்பாக உலக நாடுகள் இன்று (11-ம் தேதி) முக்கிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

ஐநா சபையின் அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியம் இன்று ஏற்பாடு செய்து இருந்த கூட்டத்தொடரில், விமானங்களை தரையில் இருந்து கண்காணிக்கும் தற்போதய நடைமுறையை மாற்றுவது தொடர்பாக உலக நாடுகள் விவாதங்களை மேற்கொண்டன. அந்த விவாதங்களின் இறுதியில் விமானங்களை செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்க அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

சுமார் 160 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், அனைத்துலக ரீதியாக விமான கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் ஏற்படுத்த வேண்டிய தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஐநா முன்வைத்துள்ள இந்த விவகாரத்திற்கு அடிப்படை காரணமாக இருந்த எம்எச்370 பேரிடர் நினைவு கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.