Home Featured நாடு யுனெஸ்கோ செயற்குழுவிற்குத் தேர்வானது மலேசியா!

யுனெஸ்கோ செயற்குழுவிற்குத் தேர்வானது மலேசியா!

790
0
SHARE
Ad

unescoகோலாலம்பூர் – ஆசிய-பசிபிக் நாடுகளில் அதிக வாக்குகளைப் பெற்று, 2015 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான யுனெஸ்கோ ( UNESCO – ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு) செயற்குழுவில் இடம்பிடித்திருக்கிறது மலேசியா.

இது குறித்து யுனெஸ்கோவிற்கான மலேசிய தேசிய ஆணையத்தின் பொதுச்செயலாளர் மொஹமட் கைருல் அடிப் அப்துல் ரஹ்மான் கூறுகையில், பிரான்சில் உள்ள பாரிஸ் நகரில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற 12வது வருடாந்திரக் கூட்டமும், 38 வது பொது கருத்தரங்கும் நடைபெற்றது. அதில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஆசிய பசிபிக் நாடுகளில் மலேசியா 165 வாக்குகள் பெற்று செயற்குழுவில் இடம்பிடித்துள்ளது. அதேவேளையில், வியட்நாம் 156 வாக்குகளும், ஸ்ரீலங்கா 149 வாக்குகளும், கொரியா 137 வாக்குகளும், பாகிஸ்தான் 135 வாக்குகளும், ஈரான் 128 வாக்குகளும் பெற்றுள்ளன.

#TamilSchoolmychoice

 

யுனெஸ்கோ செயற்குழு என்பது 58 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 186 நாடுகள் என மொத்தம் 195 உறுப்பினர் நாடுகள் வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதாகும்.