ஜார்ஜ் டவுன் – வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பினாங்கு ஜார்ஜ் டவுனில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தில் புகைபிடிப்பவர்களுக்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என பினாங்கு மாநில அரசு தெரிவித்துள்ளது.
மாநில சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைலான் அட்னான் கூறுகையில், அவர்கள் இரண்டு ஆண்டுகள் வரையில் சிறையில் அடைக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், அந்தப் பாரம்பரியத் தளம் அருகேயுள்ள எந்த கட்டிடத்திலோ அல்லது பொது இடங்களிலோ புகைபிடிக்க அனுமதியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.