கோலாலம்பூரில் அண்மையக் காலமாக பல தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வந்துள்ளனர்.
எனவே, மலேசியக் காவல் துறையும் கோலாலம்பூர், பினாங்கு போன்ற நகர்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“சிங்கப்பூரில் விழிப்பு நிலை தீவிரப்படுத்தப்படும்” – சிங்கை அமைச்சர் சண்முகம்
“எவ்வளவுதான் தற்காப்பு நடவடிக்கைகளைக் கொண்டிருந்தாலும் இனி எந்த நாடும் பாதுகாப்பில்லை. இதுபோன்ற தாக்குதல்கள், சமூகங்களில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, சமூக ரீதியான எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள் பிரான்ஸ் மக்களுக்கு எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ள சண்முகம், சந்தேகத்துக்குரிய வகையில் யாரேனும் நடந்து கொண்டால் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய நகர்களிலும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்படும்
2008இல் மும்பையில் பொதுமக்கள் மீது வீதிகளில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களின் சாயல்கள் நேற்று நடந்த பாரிஸ் நகரின் தாக்குதல்களிலும் தென்படுகின்றன என ஆரம்பக் கட்டப் புலனாய்வுகள் தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து, மும்பை, புதுடில்லி போன்ற முக்கிய நகர்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு, அந்நகர்கள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகளும் இந்நகர்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-செல்லியல் தொகுப்பு