Home Featured தமிழ் நாடு பண்ருட்டி எம்எல்ஏவிற்கு பளார் – தூக்கி அடித்த விஜயகாந்த்!

பண்ருட்டி எம்எல்ஏவிற்கு பளார் – தூக்கி அடித்த விஜயகாந்த்!

747
0
SHARE
Ad

vijayakanthகடலூர் – கடலுார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் முன்னிலையில் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக விஜயகாந்த் இன்று அங்கு வந்திருந்தார். விஜயகாந்த் நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்த நிலையில், மழை பெய்ய ஆரம்பித்ததால் வேகமாக நிவாரண பணிகளை முடித்துக்கொண்டு தன்னுடைய வாகனத்தில் (டெம்போ ட்ராவலர்) ஏறினார். அப்போது அவருடன் வாகனத்தில் ஏறிய பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகொழுந்துவின் தலையில் நாக்கை கடித்துக்கொண்டு விஜயகாந்த் தொடர்ந்து அடித்தார்.

மேலும் அவர் பொதுமக்கள் கவனிக்கின்றனர் என்பதையும் மறந்து ‘சீக்கிரம் வண்டியை எடுடா’ என்று கூறி வாகனத்தில் இருந்த ஓட்டுனரையும் காலால் உதைத்துள்ளார். விஜயகாந்தின் இந்த செயலைப் பார்த்த பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே ஒருமுறை சிவகொழுந்து, விஜயகாந்திடம் அடிவாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.