Home Featured நாடு கூட்டரசு நீதிமன்றத்தில் அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கு 2-ன் மறுஆய்வு தொடங்கியது!

கூட்டரசு நீதிமன்றத்தில் அன்வாரின் ஓரினப்புணர்ச்சி வழக்கு 2-ன் மறுஆய்வு தொடங்கியது!

630
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர் – சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கு இரண்டின் மறுஆய்வு விசாரணை தற்போது கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

கடந்த 1998-ம் ஆண்டு ஓரினப்புணர்ச்சி வழக்கு 1 மற்றும் அன்வாரின் ‘கருப்பு கண் சம்பவம்’ நடைபெற்ற காலகட்டத்தில் புக்கிட் அம்மான் குற்றப்புலனாய்வுத் துறை துணை இயக்குநராக இருந்த முன்னாள் வர்த்தக குற்ற புலனாய்வு துறை இயக்குனர் ரம்லி யூசோப்பை அழைக்குமாறு அன்வார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு மிதான விசாரணையை நீதிமன்றம் முதலில் துவங்குகிறது.

முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம் அன்வாரைப் பிரதிநிதிக்கிறார்.

#TamilSchoolmychoice

 

Comments