Home Featured உலகம் பாரிஸ் தாக்குதல்: இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்

பாரிஸ் தாக்குதல்: இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்

527
0
SHARE
Ad
  • தாக்குதல்காரர்கள் பாரிசுக்குப் புறநகர் பகுதியில் ஓர் அடுக்குமாடி வீட்டை  வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தனர்.Salah Abdeslam - Paris Attack
  •  பெல்ஜியம் புருசல்ஸ் நகரில் தாக்குதலில் சம்பந்தப்பட்டவன் என்று நம்பப்படும் அப்டிசாலாம் சாலா – (படம்)- (Abdesalam Salah) என்பவனைத் தேடும் அதிரடி வேட்டை தொடர்கின்றது.
  • தேடப்படும், அப்டிசாலாம் சாலா புருசல்சில் பிறந்த 26 வயது பிரெஞ்சு குடியுரிமை பெற்றவன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அப்டிசாலாமின் சகோதரன் பிராகிம் அப்டிசாலாம் (31 வயது)  பாரிஸ் தாக்குதலில் மரணமடைந்த தற்கொலைத் தாக்குதல்காரன்களில் ஒருவனாவான்.
  • தேடப்படும் அப்டிசாலாம் சாலா – பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டிருந்திருக்கலாம் என சந்தேகம்.
  • பெல்ஜியம் எல்லைப் பகுதியில் அப்டிசாலாம் சாலா குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றான் – ஆனால் ஏனோ கைது செய்யப்படவில்லை.
  • சிரியாவின் ராக்கா வட்டாரத்தில் பிரெஞ்சு விமானங்கள் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் நிலைகள் மீது தாக்குதல்கள் தொடுத்து வருகின்றன – 7 புதிய தாக்குதல்கள் இன்று நடத்தப்பட்டுள்ளன.
  • பாரிஸ் மீதான தாக்குதல்கள் சிரியாவில் திட்டமிடப்பட்டன என பிரெஞ்சு அதிகாரிகள் அறிவிப்பு.Abdelhamid Abaaoud -Paris Attack
  • மேலே படத்தில் காணப்படும் அப்டில்ஹாமிட் அபோட் (Abdelhamid Abaaoud)- பாரிஸ் தாக்குதல்களுக்கு பின்னணியின் இருந்து வியூகம் வகுத்து மூளையாகச் செயல்பட்டவன் என புலனாய்வுத் துறை சந்தேகம்.
  • நேற்று திங்கட்கிழமை இரவு விடிய, விடிய பிரெஞ்சுப் போலீசார் நடத்திய 168 தேடுதல் வேட்டைகளில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 31 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன – அவற்றில் சிறிய அளவிலான ஏவுகணையும் அடங்கும்.
  • பிரஞ்சுப் போலிசாரின் அதிரடி வேட்டையில் மேலும் 100 பேர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

-செல்லியல் தொகுப்பு