Home Featured நாடு தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் சைய்ட் இப்ராகிமிடம் விசாரணை

தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் சைய்ட் இப்ராகிமிடம் விசாரணை

542
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிமிடம் (படம்) தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் மாத துவக்கத்தில் தலைநகர் சிலாங்கூர் கிளப்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், மலேசியர்கள் அனைவரும் துன் மகாதீரின் பின்னால் அணிவகுக்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார்.

Zaid-430x244இந்நிலையில் தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையினர் தமது அலுவலகத்துக்கு வந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.

“மகாதீர் பின்னால் அணிவகுக்க வேண்டும் எனும் தலைப்பில் நான் பேசியது தேச நிந்தனைக்குரியது என கூறப்படுகிறது. நான் ஆற்றிய உரையை எனது வலைப்பக்கத்தில் பார்க்கலாம். எனது கருத்துக்களைத் தொடர்ந்து வெளிப்படுத்துவேன்,” என்றார் சைட் இப்ராகிம்.

#TamilSchoolmychoice

“அவ்வாறு நான் செய்யாமல் போனால், இங்கு பிராணவாயுவே இல்லாமல் போய்விடும். விமர்சிப்பது என்பது சகஜமான ஒன்று. விமர்சனங்கள் இல்லையேல் நாடு முன்னேறாது,” என்றும் சைட் இப்ராகிம் மேலும் கூறினார்.

இதற்கிடையே அவரது அலுவலகத்தில் வைத்து காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.சண்முகமூர்த்தி, அவரிடம் ஒருமணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார்.

மூத்த அரசியல்வாதியான சைட், தமது வலைப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட அந்தக் கட்டுரையை நீக்கப் போவதில்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அம்னோவில் முக்கியத் தலைவராக இருந்த சைட் இப்ராகிம் முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவியின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பணியாற்றினார்.

பின்னர் பிரதமருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அம்னோவிலிருந்து வெளியேறிய அவர் பிகேஆர் கட்சியில் இணைந்தார்.

ஆனால் அங்கேயும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிகேஆர் கட்சியிலிருந்தும் வெளியேறிய, ஒரு வழக்கறிஞரான சைட் இப்ராகிம் பல வழிகளிலும் நடப்பு அரசாங்கத்திற்கு எதிராகவும், 1 எம்டிபி விவகாரத்திலும் போராட்டம் நடத்தி வருகின்றார்.

பெர்சே பேரணியில் மகாதீருடன் சைட் இப்ராகிமும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.