Home Featured வணிகம் இந்தியா, இந்தோனேசியாவிற்கான விமானக்கட்டணம் பாதிதான் – ஏர் ஆசியா புதிய சலுகை!

இந்தியா, இந்தோனேசியாவிற்கான விமானக்கட்டணம் பாதிதான் – ஏர் ஆசியா புதிய சலுகை!

580
0
SHARE
Ad

airasiaகோலாலம்பூர் – ஏர் ஆசியா நிறுவனம் இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கான விமான சேவை கட்டணங்களில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி வழக்கமான கட்டணத்தை விட பாதி விலையில் (50 சதவீதம்) அந்நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு கோலாலம்பூரில் இருந்து பயணம் மேற்கொள்ளலாம்.

கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் கோவா, விசாகப்பட்டினம், கொச்சி நகரங்களுக்கும், இலங்கையின் கொழும்பு மற்றும் இந்தோனேசியாவின் பாலெம்பாங், பொந்தியானாக், மற்றும் ஜோக்ஜாகர்த்தாவிற்கும் ஒரு வழிக் கட்டணமாக 50 சதவீத சலுகைகளை அறிவித்துள்ளது.

இதுதவிர  கோலாலம்பூரில் இருந்து பூசான் (தென் கொரியா), சப்போரோ (ஜப்பான்), சோங்கிங் (சீனா) மற்றும் ட நாங் (வியட்நாம்) நகரங்களுக்கு முறையே 329, 449, 239 மற்றும் 169 ரிங்கிட் ஒரு வழிக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கான கட்டண முன்பதிவு சமீபத்தில் தொடங்கி உள்ளது. இந்த பதிவைப் பயன்படுத்தி 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை பயணம் செய்யலாம்.

மேலும் விரிவான விபரங்களுக்கு ஏர் ஆசியாவின் www.airasia.com.my என்ற அகப்பக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.