Home Featured உலகம் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஐஎஸ் தீவிரவாதிகள் – போர்க்களமாகும் பாரிஸ்!

குடியிருப்பு பகுதியில் புகுந்த ஐஎஸ் தீவிரவாதிகள் – போர்க்களமாகும் பாரிஸ்!

519
0
SHARE
Ad

paris terrorist 600பாரிஸ் – பாரிசின் வடக்கு புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததாகவும், தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த பிரான்ஸ் காவல்துறைக்கு இது தொடர்பாக தகவல்கள் வந்ததும், அவர்கள் அங்கு விரைந்ததாகவும் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாயின.

paris3வெளியேற்றப்பட்ட குடியிருப்புவாசிகள்

இந்நிலையில், அதிரடிப்படையினர் நுழைந்ததை தெரிந்து கொண்ட தீவிரவாதிகள் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போதைய தகவலின் படி, தீவிரவாதிகளின் தாக்குதலில் காவல்துறையினர் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், பதில் தாக்குதலில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

#TamilSchoolmychoice

paris1மேலும், சமீபத்தில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐஎஸ் தீவிரவாதி அப்டெல்ஹமித் அபவுட்(படம்) அந்த குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்துள்ளன.

இதற்கிடையே,  தீவிரவாதிகளின் பிடியில் குடியிருப்புவாசிகள் யாரேனும் சிக்கி உள்ளனர் என்பது தெரியவில்லை.