Home Featured உலகம் வெடிகுண்டு மிரட்டல்: 2 ஏர் பிரான்ஸ் விமானங்கள் அவசரத் தரையிறக்கம்!

வெடிகுண்டு மிரட்டல்: 2 ஏர் பிரான்ஸ் விமானங்கள் அவசரத் தரையிறக்கம்!

561
0
SHARE
Ad

Air_Franceலாஸ் ஏஞ்சல்ஸ் – சில மர்ம நபர்களிடமிருந்து மிரட்டல் வந்ததையடுத்து, அமெரிக்காவில் இருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற இரண்டு ஏர் பிரான்ஸ் விமானங்கள், நேற்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டு அதிலிருந்த பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக, மத்திய வான் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து புறப்பட்ட ஏர்பஸ் ஏ-380 சால்ட் லேக் சிட்டியிலும், டல்லஸ் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனி விமானம்  ஒன்று ஹாலிபேக்ஸ் அனைத்துலக விமான நிலையத்திலும் தரையிறக்கப்பட்டு பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

 

#TamilSchoolmychoice