Home Featured உலகம் ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்தது போலி வெடிகுண்டு!

ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்தது போலி வெடிகுண்டு!

858
0
SHARE
Ad

Air Franceநைரோபி – கழிவறையில் இருந்த வெடிகுண்டு வடிவிலான மர்மப் பொருள் ஒன்றால், மொரீசியசில் இருந்து பாரிஸ் நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் 463 போயிங் 777 விமானம் கென்யாவிலுள்ள மொம்பாசா விமானநிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

உடனடியாக அங்கு வந்த கென்யா வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் கழிவறையில் இருந்த அந்தப் பொருளைக் கைபற்றி சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அப்பொருள் வெற்று அட்டை, பேப்பர் மற்றும் டைமரால் உருவாக்கப்பட்ட வெற்று குண்டு எனத் தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

“அது ஒரு மிக மோசமான ஆக்ரோஷச் செயல்” என ஏர் பிரான்ஸ் தலைவர் ப்ரெடிக் கேகே தெரிவித்துள்ளார்.

அந்த விமானத்தில் 459 பயணிகளோடு, 14 விமானப் பணியாளர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு மொம்பாசா விமான நிலையத்தின் அருகே தங்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் சில மணி நேரங்களில் பாதுகாப்பாக பாரிசுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விமானப் பயணிகளில் நால்வர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.