Home Featured நாடு பிரபல மலேசியத் தொழிலதிபர் நெடுஞ்சாலையில் தூக்கிலிட்டுக் கிடந்தார்!

பிரபல மலேசியத் தொழிலதிபர் நெடுஞ்சாலையில் தூக்கிலிட்டுக் கிடந்தார்!

593
0
SHARE
Ad

kota-darul-ehsan-archகோலாலம்பூர் – நேற்று அதிகாலை கோத்தா டாருல் ஈசான் நுழைவு வாயிலில் ஆடவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்ட பெடரல் நெடுஞ்சாலை வாகனமோட்டிகள், காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இறந்தவர் அசோக் குமார் கோயாம்பூ (வயது 53) என்ற பிரபல தொழிலதிபர் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

மலேசிய விமானப் படையின் முன்னாள் வீரரான அவர், தனது பெயரில் நிறுவனங்களும், கேளிக்கை விடுதியும் நடத்தி வந்தவர் ஆவார். இதன் மூலம், பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கு அவர் நன்கு பரிட்சையமான நபராகவும் இருந்துள்ளார்.

அவரது இறப்பில் சந்தேகப்படும் படியான தடையங்கள் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது. எனினும், அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.