Home Featured உலகம் பாரிஸ்: இன்றைய வேட்டையில் 2 பேர்தான் கொல்லப்பட்டனர் – மூவர் அல்ல! 7 பேர் கைது!

பாரிஸ்: இன்றைய வேட்டையில் 2 பேர்தான் கொல்லப்பட்டனர் – மூவர் அல்ல! 7 பேர் கைது!

687
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பாரிஸ் – உலக மக்களின் ஒட்டு மொத்தப் பார்வைக்கும் உள்ளாகியுள்ள பாரிஸ் நகரத்தின் வடக்குப் பகுதியில் பிரெஞ்சுக் காவல் துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் இதுவரை இருவர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர் என பிரெஞ்சு உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சற்றுமுன் வெளியான தகவல்களின்படி 3 பேர் கொல்லப்பட்டதாக தொலைக்காட்சி ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

கொல்லப்பட்ட இருவரில் வெடிகுண்டு கவசத்தைத் தானே வெடிக்கச் செய்து கொண்டு உயிரிழந்த தற்கொலைப் படைப்பெண்ணும் ஒருவராவார்.

#TamilSchoolmychoice

மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாரிஸ் நகரைக் குறிவைக்கப்பட்டு மேற்கொள்ளப்படவிருந்த மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.