Home Featured உலகம் 500 பேர் கூடியிருந்த நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் பதற்றம்!

500 பேர் கூடியிருந்த நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் பதற்றம்!

487
0
SHARE
Ad

americaநியூ ஆர்லியன்ஸ்  – அமெரிக்காவில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நியூ ஆர்லியன்ஸ் நகரின் விளையாட்டு மைதானம் ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியை காண்பதற்காக 500 பேர் கூடியிருந்த பகுதியில், மர்ம மனிதர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் 16 பேர் சுடப்பட்டதாகவும்,  அவர்களில் 10 பேர் பலியானதாகவும் தகவல்கள் வந்துள்ளன. எனினும், பலியானவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அதிரடிப்படையினரும், மீட்புக் குழுவும் விரைந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்? இதில் தீவிரவாதிகளின் சதி உள்ளதா? என்பது குறித்து இன்னும் தெளிவாகவில்லை.