Home Featured உலகம் என் நண்பன் லீ சியான் லூங் – டுவிட்டரில் உருகிய மோடி!

என் நண்பன் லீ சியான் லூங் – டுவிட்டரில் உருகிய மோடி!

822
0
SHARE
Ad

CUf-i2nUcAAaxouசிங்கப்பூர் – சிங்கப்பூர் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங், இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் வெளியில் அழைத்துச் சென்று விருந்தளித்துள்ளார். விருந்தில் மோடிக்கு பிடித்த இந்திய உணவுகளே பரிமாறப்பட்டன. லீ சியான் லூங்கும் இந்திய உணவுகளையே சாப்பிட்டார். அவரின் விருந்தோம்பல் மோடியை நெகிழச் செய்தது.

இது தொடர்பாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “என் நண்பர் லீ சியான் லூங், தற்போது என்னை சிங்கப்பூரை காண்பிப்பதற்காக அழைத்துச் செல்கிறார். தீபாவளி விளக்குகளின் வெளிச்சத்தில் இந்திய உணவுகளை வழங்கிய அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விருந்தில் லீ சியான் லூங்கின் மனைவியும் உடன் இருந்தார்.