Home Featured இந்தியா கருணாநிதி மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!

கருணாநிதி மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!

744
0
SHARE
Ad

Karunanidhi and Jayalalithaaசென்னை – தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி முரசொலி பத்திரிக்கையின் ஆசிரியரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடுத்துள்ளது.

கடந்த நவம்பர் 21-ம் தேதி முரசொலி பத்திரிக்கையில், தமிழக அரசு என்ன சாதித்தது? என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. முரசொலி செய்தி ஆசிரியர் செல்வம் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆனந்த விகடன் பத்திரிக்கை மீதும் அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.