Home Featured நாடு ஓரங்கட்டப்படும் மொகிதீன்: மரபுகளை உடைக்கும் அம்னோ!

ஓரங்கட்டப்படும் மொகிதீன்: மரபுகளை உடைக்கும் அம்னோ!

594
0
SHARE
Ad

muhyiddin-yassin1கோலாலம்பூர்-இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த மரபுக்கு மாறாக அம்னோ இளைஞர், மகளிர், புத்ரி பிரிவுகளின் ஆண்டுப் பொதுப் பேரவைகளை கட்சியின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தொடக்கி வைக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக, இந்தக் கூட்டங்களை அந்தந்தப் பிரிவுகளின் தலைவர்களே துவக்கி வைப்பர் என அம்னோ உச்சமன்றம் முடிவு செய்துள்ளது. கட்சியின் மூன்று பிரிவுகளிடம் இருந்தும் கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் அம்னோ உச்சமன்றம் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளதாக கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.

“அம்மூன்று பிரிவுகளின் விருப்பமும் அதுதான். அம்முடிவை நாங்கள் மதிக்கிறோம்” என்று செய்தியாளர்களிடம் பேசியபோது நஜிப் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், உதவித் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி ஆகிய இருவரையும் பார்க்க முடியவில்லை. இந்தக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடித்து.

கோப்பெங் அம்னோ மகளிர் பிரிவு தலைவி டத்தோ ஹமிடா ஓஸ்மானை ஒழுங்கு நடவடிக்கையின் பரிந்துரையின் பேரில் கட்சியில் இருந்து நீக்குவதற்கான முடிவும் உச்சமன்றக் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக பிரதமர் நஜிப் தெரிவித்தார்.

“கட்சி வலுப்பெற வேண்டும் என்பதற்காகவும், மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் தொடர்ந்து பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவுகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன” என்று நஜிப் மேலும் கூறினார்.