Home Featured இந்தியா அமீர்கானுக்கு வலுக்கும் எதிர்ப்பு: உருவப் பொம்மைகள் எரிப்பு

அமீர்கானுக்கு வலுக்கும் எதிர்ப்பு: உருவப் பொம்மைகள் எரிப்பு

759
0
SHARE
Ad

டேராடூன்- சகிப்புத்தன்மை குறித்து நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் புதிய விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில், டேராடூன் பகுதியில் அவரது உருவப் பொம்மைகள் பரவலாக எரிக்கப்பட்டன.

நாட்டில் சகிப்புத்தன்மை வெகுவாகக் குறைந்து வருவதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அமீர்கான் குறிப்பிட்டார். இதையடுத்து அவருக்கு ஆதரவாகவும், கண்டனம் தெரிவித்தும் பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

aamirkhanஇந்நிலையில் டேராடூனில் அமீர்கானின் உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்டன. புதன்கிழமை சிவசேனா கட்சியை சேர்ந்த 50 இளைஞர்கள் இச்செயலில் ஈடுபட்டனர்.
நகரின் மையப்பகுதியில் கூடிய அவர்கள் அமீர்கானுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அவரது உருவப்பொம்மைக்கு காலணிகளை சப்பாத்துகளையும் கொண்டு மாலையும் அணிவித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

“மிகப்பெரிய திரைப்பட நடிகர் எப்படி இவ்வாறான ஒரு கருத்தைக் கூறலாம்? அமீர்கான் வேறு ஏதேனும் நாட்டில் வசிக்க முயற்சிக்கட்டும். அப்போதுதான் சகிப்புத்தன்மை என்பதற்கான உண்மையான அர்த்தம் அவருக்குப் புரியும்” என சிவசேனா கட்சியின் டேராடூன் மாவட்டத் தலைவர் மனோஜ் வோரோ செய்தியாளர்களிடம் கோபத்துடன் குறிப்பிட்டார்.
இனி அமீர்கான் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களைப் புறக்கணிக்கப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

சிவசேனாவைப் போன்றே பாஜக தொண்டர்களும் அமீர்கான் உருவப்பொம்மைகள், சுவரொட்டிகளுக்கு தீயிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டேராடூனில் இரு இடங்களில் பாஜகவின் போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையே இந்திய மாணவர் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் அமீர்கானுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதால் டேராடூனில் புதன்கிழமை முழுவதும் பரபரப்பு நிலவியது.