Home Featured தொழில் நுட்பம் 65 மின்னஞ்சல்களை அனுப்புவதும் ஒரு கிலோ மீட்டர் காரை ஓட்டுவதும் ஒன்று தான்!

65 மின்னஞ்சல்களை அனுப்புவதும் ஒரு கிலோ மீட்டர் காரை ஓட்டுவதும் ஒன்று தான்!

630
0
SHARE
Ad

email1கோலாலம்பூர் – தலைப்பை வைத்து இந்த செய்தி நமது உடலின் கலோரி எரிப்பு பற்றியது என்று எண்ணி விட வேண்டாம். இது கரியமில வாயு வெளியீடு தொடர்பான ஒன்று. புறா விடு தூதில் தொடங்கி அஞ்சல்காரர் வரை தகவல் பரிமாற்றம் ஒரே நேர்கோடாக இருந்து வந்த நிலையில், எப்போது இணையம் செயல்படத் தொடங்கியதோ அப்போதே தகவல் தொடர்பில் பல்வேறு கட்ட பரிணாம மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன.

பல்வேறு வகையில் இந்த மாற்றம் பயன் உள்ளதாக இருந்தாலும், இவற்றிற்காக நாம் கொடுத்து வரும் விலையும் அதிகம். இணையத்தை இணைக்கும் கணினியில் தொடங்கி, சர்வர், ரௌட்டர் என பல்வேறு கட்ட அளவில் கரியமிலவாயு ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதுவரை குளிர்சாதனப் பொருட்கள் மற்றும் வாகனங்களில் இருந்து தான் கரியமில வாயு வெளியாகும் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சித் தகவலின் படி, ஒரு மின்னஞ்சல் அனுப்ப ஆகும் சில வினாடிகளில், 4 கிராம் அளவிற்கு கரியமில வாயு வெளியாகிறதாம்.  ஒரு காரை ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டினால் எவ்வளவு கரியமில வாயு வெளியேறுமோ, அதே அளவிற்கு மொத்தமாக 65 மின்னஞ்சல்களை அனுப்பும் போதும் வெளியேறுமாம்.

#TamilSchoolmychoice

அதேசமயத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல்களில் பெரிய கோப்புகளை இணைப்பாக (Attachment) வைத்து அனுப்பும் போது வழக்கத்தை விட அதிக அளவு கரியமில வாயு வெளியேறும் என்று கூறுகின்றனர்.

இதன் காரணமாக நாம் உலகம் முழுவதும் மின்னஞ்சல்கள் அனுப்புவதை முடக்கவோ? அல்லது தடுக்கவோ? கற்பனையிலும் முடியாத ஒன்று. இதற்கான தீர்வும் சிக்கலான் ஒன்று தான். தற்போதய நிலையில் நம்மால் முடிந்தது, கூடுமானவரை இயற்கையின் செழுமையை அதிகப்படுத்துவது தான் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.