Home தமிழ் நாடு முன்பு 2ஜி, தற்போது கிரானைட் பூதம் – 1.06 லட்சம் கோடி வருவாய் இழப்பா?

முன்பு 2ஜி, தற்போது கிரானைட் பூதம் – 1.06 லட்சம் கோடி வருவாய் இழப்பா?

559
0
SHARE
Ad

granite quary350சென்னை – மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கபட்ட சகாயம் தலைமையிலான குழு  தங்களது அறிக்கையை சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், கிரானைட் கற்கள் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பரிசீலனை முதல் கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பது வரை பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த முறைகேட்டால் அரசுக்கு 1.06 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் வருவாய் இழப்பு கணக்கிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், அந்த அறிக்கையில் இந்த முறைகேடு தொடர்பாக முழு விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதற்காக தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.