Home Featured கலையுலகம் ‘எந்திரன்-2’ கதை விவாதம்: ஷங்கருடன் அமெரிக்கா சென்றார் ரஜினி!

‘எந்திரன்-2’ கதை விவாதம்: ஷங்கருடன் அமெரிக்கா சென்றார் ரஜினி!

769
0
SHARE
Ad

rajini-and-arnoldகோலாலம்பூர் – ‘எந்திரன்-2’ படத்தின் கதை விவாதத்திற்காக நடிகர் ரஜினி, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்கா சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக ‘கபாலி’ படப்பிடிப்புக்காக மலேசியா, தாய்லாந்து சென்று அண்மையில் தான் சென்னை திரும்பியிருந்தார் ரஜினி. ‘எந்திரன்-2’ படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்குவாசநேசர் வில்லனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. அவரை ரஜினியும் ஷங்கரும் நேரில் சந்தித்து படம் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் மலேசியாவில் இருந்து சென்னை சென்ற ரஜினி, ஓரிரு நாள் ஓய்வுக்குப் பின் ‘எந்திரன்-2’ படத்திற்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

#TamilSchoolmychoice

அங்கு படத்தின் மொத்த பட்ஜெட், ஆர்னால்ட்டை ஒப்பந்தம் செய்வது, யார் கதாநாயகி என்பன போன்ற விஷயங்களை ஷங்கரும் ரஜினியும் இறுதி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புவதாக நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் தாம் நடித்துவிட்டதாகவும், ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்மணி ஆசையை சொல்லியாச்சு, இனி முடிவு ரஜினி கையில்!