Home Slider சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு!

சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு!

569
0
SHARE
Ad

rajinimuruganசென்னை – சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்டகாலமாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் ‘ரஜினி முருகன்’ படம், பல்வேறு காரணங்களால் வெளியிடுவதில் சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து, நாளை (4-ம் தேதி) படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், மழை உருவத்தில்  மீண்டும் சிக்கல் உருவாகி உள்ளது.

பேரிடர் காரணமாக சென்னை முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை தற்போது வெளியிடவில்லை என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் அதர்வா நடிப்பில் நாளை வெளியாக இருந்த ‘ஈட்டி’ படமும், பாபிசிம்ஹாவின் ‘உறுமீன்’ படமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.