Home Featured கலையுலகம் சென்னை பேரிடர்: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் 25 லட்சம் நிதியுதவி!

சென்னை பேரிடர்: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் 25 லட்சம் நிதியுதவி!

605
0
SHARE
Ad

Allu-Arjun-and-NTRசென்னை – தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரில் மழைவெள்ளம் புகுந்து மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திரையுலகினர், முதலமைச்சரின் வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

தமிழ் நடிகர்கள் சித்தார்த், ஆர்ஜே பாலாஜி, தனுஷ், அனிரூத் போன்றவர்கள் பல்வேறு வகையில் நிவாரணி பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் 25 லட்சம் ரூபாய், முதல்வர் நிவாரணி நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

அதேபோல், மற்றொரு முன்னணி தெலுங்கு நடிகரான ஜூனியர் என்.டி.ஆர், 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.