Home Featured தமிழ் நாடு சென்னை வெள்ளம்: இன்று மாலை இறுதி நிலவரம்!

சென்னை வெள்ளம்: இன்று மாலை இறுதி நிலவரம்!

743
0
SHARE
Ad

Flights suspended as renewed flooding hits India's Chennaiசென்னை – தமிழகத் தலைநகரின் வெள்ள நிலவரம் குறித்து இன்று மாலை 6.30 (மலேசிய நேரம்) வரையிலான இறுதி நேரத் தகவல்கள் – சில வரிச் செய்திகளாக!

  • சென்னை மக்களுக்கு ஒட்டு மொத்தமாக தடுப்பூசிகள் செலுத்த அப்போல்லா மருத்துவமனை நிர்வாகம் முன்வந்துள்ளது. இலவச சேவைகள் வழங்கவும் தயார்!
  • இன்று முதல் சிறப்பு இரயில் சேவைகள் இயக்கம்
  • நாளை முதல் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து முழுமையான இரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படும் என தென்னக இரயில்வே அறிவிப்பு
  • சென்னை மியாட் மருத்துவமனையில் மின்சாரத் தடை காரணமாக, செயற்கை சுவாச இயந்திரங்கள் இயங்காததால் 18 பேர் உயிரிழந்தது தொடர்பில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • வெள்ளத்தில் காணாமல் போன – சிதைந்து போன – பொதுமக்களின் பத்திரங்கள், கல்வித் சான்றிதழ்கள் ஆகியவற்றுக்கான மாற்றுப் பிரதிகள் சுலபமான முறையில் வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதிமுக தலைவர் வைகோ வேண்டுகோள்.
  • சென்னை விமான நிலையத்திலிருந்து வர்த்தக ரீதியிலான விமான சேவைகள் இன்னும் முறையாகத் தொடங்கப்படவில்லை.
  • மழைநீர் வடிந்த இடங்களில் மின் இணைப்புகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.
  • இன்னும் இரண்டு நாட்களில் முழுமையான அளவில் மின்சார விநியோகம் சீராகும் என மின்சார இலாகா உறுதி
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு உதவிக் கரம் நீட்ட தயார் என அமெரிக்க அரசாங்கம் அறிவிப்பு
  • இந்தியக் கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
  • அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை இலாகா அறிவிப்பு