Home வாழ் நலம் தினமும் புதிய கிருமிகள் உருவாவதால் மனித குலத்துக்கு பெரும் ஆபத்து- இங்கிலாந்து விஞ்ஞானி எச்சரிக்கை

தினமும் புதிய கிருமிகள் உருவாவதால் மனித குலத்துக்கு பெரும் ஆபத்து- இங்கிலாந்து விஞ்ஞானி எச்சரிக்கை

621
0
SHARE
Ad

bacteriaலண்டன், மார்ச். 13-  உலகம் முழுவதும் புதிய புதிய நோய்கள் அடிக்கடி உருவாகி வருகின்றன. அந்த நோய் கிருமிகளை கொல்வதற்கு உரிய மருந்துகள் இல்லை. இதற்கு பதிலாக நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டி பயாடிக்) மருந்துகளை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகளும் தற்போது சரியாக வேலை செய்யவில்லை. இதனால் மனித குலத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று இங்கிலாந்து விஞ்ஞானியும் தலைமை மருத்துவ அதிகாரியுமான சேலிடேவிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

“புதிய வகை நோய் எதிர்ப்பு சக்தி மருந்து சமீபகாலமாக கண்டுபிடிக்கப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைதான் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இப்போதெல்லாம் கிருமிகள் கட்டுப்படுவதில்லை.”

#TamilSchoolmychoice

‘மேலும் தினமும் புதிய புதிய கிருமிகள் உருவாகி வருகின்றன. ஆனால் புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கிருமிகளால் மனித குலம் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் இது தீவிரவாதத்தைவிட மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும்” –  இவ்வாறு அவர் கூறினார்.