Home இயக்கங்கள் தமிழ் இளைஞர் மணிமன்றம் படைக்கும் ‘மணிமன்ற நாள் 2013’

தமிழ் இளைஞர் மணிமன்றம் படைக்கும் ‘மணிமன்ற நாள் 2013’

1000
0
SHARE
Ad

tamil-ilanjarலாபிஸ், மார்ச்.13- எதிர்வரும் 15.3.2013 தேதி வெள்ளிகிழமை மணிமன்ற நாளை முன்னிட்டு லாபிஸ் தமிழ்  இளைஞர் மணிமன்றம் ‘மணிமன்ற நாள் 2013’  எனும் நிகழ்வை படைக்கிறது.

இந்நிகழ்ச்சியில் லாபிஸ் மணிமன்ற செயற்குழு உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கு நடைபெறும். இந்நிகழ்வு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தாமான் இண்டா லாபிசிலுள்ள சமூக மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

ஜோகூர் மாநில மணிமன்ற முன்னாள் தலைவர் ஜி.கணேசன், ஜோகூர் மாநில இந்து சங்கத் தலைவர் தொண்டர்மணி இராமகிருஷ்ணன், லாபிஸ் தொகுதி பிபிபி துணைத்தலைவர் எஸ் பெருமாள் ஆகியோர் சிறப்பு வருகை தருவர்.