Home அரசியல் லகாட் டத்து விவகாரத்தில் அன்வார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் – பி.கே.ஆர்

லகாட் டத்து விவகாரத்தில் அன்வார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் – பி.கே.ஆர்

541
0
SHARE
Ad

images (1)கோலாலம்பூர்,மார்ச் 13 – லகாட் டத்து விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வாருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று பி.கே.ஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “கடந்த 15 ஆண்டுகளாக நாட்டில் நடக்கும் தவறுகளுக்கெல்லாம் அன்வார் தான் காரணம் என்று ஆளும் கட்சியினர் அவர் மீது வீண் பழி சுமத்த முயன்று வருகிறார்கள். லகாட் டத்து விவகாரத்தை அரசு கையாண்ட விதத்தில் உள்ள தவறுகளை மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இப்போது அன்வார் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.” என்று கூறினார்

இவ்விவகாரம் தொடர்பாக, பி.கே.ஆரின் வியூக இயக்குனர் ரபிஸி ரமலி, அன்வாரையும், தன்னோடு சேர்த்து மேலும் சில எதிர்கட்சித் தலைவர்களையும் விரைவில் கைது செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்” என்று நேற்று ‘மலேசியா குரோனிக்கல்ஸ்’ என்ற இணையதளம் செய்தி வெளியிட்டிருந்ததை அஸ்மின் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும், “பி.கே.ஆர் எப்போதும் நமது காவல்துறையினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் ஆதரவாகவே செயல்படும்” என்று அஸ்மின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.