தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எழுதி உள்ள கடித்தத்தில், “வெள்ள பாதிப்பினால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி இருப்பது கவலை அளிக்கிறது. மற்ற சிங்கப்பூர் பிரஜைகள் போல் நானும், வெள்ள பாதிப்பில் இருந்து உங்கள் மாநிலம் மீண்டு வரும் என நம்புகிறேன். வெகு விரைவில் உங்கள் தலைமையில் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பும் என்பதில் எங்களுக்கு முழுநம்பிக்கை உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Comments