Home Slider பெட்ரோல் தட்டுப்பாடு – இந்தியன் ஆயில் அதிரடி நடவடிக்கை!

பெட்ரோல் தட்டுப்பாடு – இந்தியன் ஆயில் அதிரடி நடவடிக்கை!

566
0
SHARE
Ad

indian oilசென்னை – சென்னை வெள்ளம் காரணமாக 466 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் பெரும்பாலானவை மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டதாகவும், எஞ்சிய நிலையங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது என ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொருக்குப்பேட்டையில் நேற்று மட்டும் 140 லாரிகளில் பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் வரை 100 லாரிகளில் பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் ஓரளவிற்கு எரிவாயு தட்டுப்பாட்டை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.